Wednesday, August 28, 2013

சக்கரை நிலவே பெண் நிலவே / Sakarai nilave pen nilave



சக்கரை நிலவே பெண் நிலவே 
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
சக்கரை நிலவே பெண் நிலவே 
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே
மணம் பச்சை தண்ணி தான் பெண்ணே
அதை பற்ற வைத்ததும் கண்ணே
என் வாழ்க்கை என்னும் காட்டை எரித்து
குளிர் காய்ந்தாய் கொடுமை பெண்ணே
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா
சக்கரை நிலவே பெண் நிலவே 
காணும் போதே கரைந்தாயே
நிம்மதி இல்லை ஏன் இல்லை நீ இல்லையே



ஓஓஓஓஒ................. தனநனா    தனநனா
ஓஓஓஓஒ................. நனநனா    நனநனா

காதல் என்ற ஒன்று 
அது கடவுள் போல
உணரத்தானே முடியும் 
அதில் உருவம் இல்லை
காயம் கண்ட இதயம் 
ஒரு குழந்தை போல
வாயை மூடி அழுமே 
சொல்ல வார்த்தை இல்லை
அன்பே உன் புன்னகை எல்லாம் 
அடி நெஞ்சில் சேமித்தேன்
கண்ணே உன் புன்னகை எல்லாம் 
கண்ணீராய் உருகியதே
வெள்ளை சிரிப்புகள் உன் தவறா
அதில் கொள்ளை போனது என் தவறா
பிரிந்து சென்றது உன் தவறா
நான் புரிந்து கொண்டது என் தவறா
ஆண் கண்ணீர் பருகும் பெண்ணின் இதயம்
சதையல்ல கல்லின் சுவரா
கவிதை பாடின கண்கள்
காதல் பேசின கைகள்
கடைசியில் எல்லாம் பொய்கள்
என் பிஞ்சு நெஞ்சு தாங்குமா



நவம்பர் மாத மழையில் 
நான் நனைவேன் என்றேன்
எனக்கும் கூட நனைதல் 
மிக பிடிக்கும் என்றாய்...
மொட்டை மாடி நிலவில் 
நான் குளிப்பேன் என்றேன்
எனக்கும் அந்த குளியல் 
மிக பிடிக்கும் என்றாய்...
சுகமான குரல் யாரென்றால் 
சுசீலாவின் குரல் என்றேன்
எனக்கும் அந்த குரலில் ஏதோ 
மயக்கம் என நீ சொன்னாய்
கண்கள் மூடிய புத்தர் சிலை
என் கனவில் வருவது பிடிக்குமென்றேன்
தயக்கம் என்பதே சிறிதுமின்றி அதை
எனக்கும் எனக்கும் தான் பிடிக்குமென்றாய்
அடி உனக்கும் உனக்கும் எல்லாம் பிடிக்க
என்னை ஏன் பிடிக்காதென்றாய்



படம் :- யூத் / 2002

இசை : மணி ஷர்மா

பாடல்:- வைரமுத்து

பாடியவர் :- ஹரிஷ் ராகவேந்தர்






Sakkarai nilave pen nilave song in English
 
 

Sakkarai nilave pen nilave

kanum podhe karainthaye

nimmathi illai ehen illa nee illaiye

sakkarai nilave pen nilave

kanum podhe karainthaye

nimmathi illai ehen illai nee illaiye

manam pachai thanni thaan penne

athai patra vaiththathum kanne

en vazhkkai ennum kaatai eriththu

kulir kainthaai kodumai penne

kavithai paatina kangal

kathal pesina kaigal

kadaisiyil ellam poigal

en pinju nenju thaanguma

sakkarai nilave pen nilave

kanum podhe karainthaye

nimmathi illai ehen illai nee illaiye



o o o o .... thana nanaa eh thana nanaa

o o o o .... nana nanaa eh nana nanaa


kadhal endra ondru

athu kadavul pola

unaraththane mudiyum 

athil uruvam illai

kayam kanda idhayam

oru kuzhanthai pola

vaayai mudi azhume

solla varthai illai

anbe un punnagai ellam

adi nenjil semiththen

kanne un punnagai ellam

kanneraai urugiyadhe

vellai sirippugal un thavaraa

athil kollai ponadhu en thavaraa

pirinthu sendrathu un thavaraa

naan purinthu kondadhu en thavaraa

aan kanneer parugum pennin idhayam

sathaiyalla kallin suvaraa

kavithai padina kangal

kadhal pesina kaigal

kadaisiyil ellam poigal

en pinju nenju thanguma



november matha mazhiyil 

naan nanaiven endren

enakkum kuda nanaithal

miga pidikkum endraai...

mottai maadi nilavil

naan kulippen endren

enakum antha kuliyal

miga pidikum endraai...
sugamana kural yarendral

susilaavin kural endren

enakum antha kuralil edho

mayakkam ena nee sonnaai

kangal mudiya buthar silai

en kanavil varavadhu pidikkumendren

thayakkam enbadhe sirithumindri athai

enakkum enakkum thaan pidikkumendraai

adi unakkum unakkum ellam pidikka

ennai ehen pidikkaathendraai



Cinema :- Youth / 2002

Music:- Mani sharma

Lyrics:- Vairamuthu

Singer:- Harish Ragavendhar


No comments:

Post a Comment

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...