ராமலிங்க அடிகளார் (திருவருட் பிரகாச வள்ளலார்) அருளிய
திருவருட்பா என்ற ஆன்மிக நூலிலிருந்து மனுமுறை கண்ட வாசகம் பாடல்.
மனுமுறை கண்ட வாசகம்
நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ
வரவு போக்கொழிய வழி யடைத்தேனோ
தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ
கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ
களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ
மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ
குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்த்தேனோ
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ
இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ
பொருளை இச்சித்துப் பொய் பல சொன்னேனோ
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ
ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷத்தை யழித்தேனோ
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ
பகைகொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ
கோள்பல சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ
கற்பிழிந்தவளைக் கலந்திருந்தேனோ
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ
கன்றுக்குப் பாலுட்டாது கட்டி வைத்தேனோ
குருவை வணங்கக் கூசி நின்றேனோ
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ
சுத்த ஞானிகளைத் தூக்ஷணம் செய்தேனோ
மாதா பிதாவை வைது நின்றேனோ
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ
தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேனோ
Manu murai kanda vasagam Song in English
Nallor manaththai nadungach seitheno
Nattatril kaiyai nazhuva vitteno
valiya vazhakittu maanang keduththeno
varavu pokkozhiya vazhi yadaiththeno
dhaanam kodupporai thaduththu ninreno
tharumam paaradhu thandam seitheno
kalantha sinegitharai kalakanj seitheno
kalavu seivorukku ulavu sonneno
manamoththa natpukku vanjagam seitheno
mannoram pesi vaazh vazhiththeno
Kudi vari uyarthi kollai kondeno
kudikkindra nirulla kulaththai thurtheno
ezhaigal vayiru eriyach seitheno
irapporku pitchai illai endreno
uyir kolai seivorku upagaram seitheno
uun suvai undu udal valarththeno
porulai itchiththup poi pala sonneno
pothu mandapaththai poyidiththeno
aasai kaati mosanj seitheno
anbudaiyavarkuth thunpanj seitheno
Velai ittu kuli kuraiththeno
veiyilukkodhunkum virukshaththai yazhiththeno
pasiththor mugaththai paarathiruntheno
pagai kondu ayalor payirai azhiththeno
kol pala solli kudumpang kalaiththeno
kalangi olinthorai kaatik koduththeno
karpizhinthavalai kalanthiruntheno
kanavan vazhi nirporai karpazhiththeno
kaaval kondiruntha kanniyai azhiththeno
karuppa mazhiththu kaliththiruntheno
katravar thammai kadukaduththeno
kandrukkup paaluttathu katti vaiththeno
guruvai vananga kusi ninreno
guruvin kaanikkai kodukka marantheno
patchiyai kundil pathaikka adaitheno
periyor paatil pizhai sonneno
kallum nellum kalanthu vittreno
thavanj seivorai thaazhvu sonneno
aalayak kadhavai adaithu vaiththeno
sivanadiyaarau siiri vaitheno
suthu gnanikalai thukshanam seitheno
maatha pithaavai vaidhu ninreno
thanthai thaai mozhiyai thalli nadantheno
theivaththai egazhnthu serukkadaintheno
enna paavam seitheno ?
enna paavam seitheno ?
enna paavam seitheno ? ...
No comments:
Post a Comment