Tuesday, October 9, 2012

திருப்பள்ளி எழுச்சி / Thiruppalli Ezhuchchi


ராமலிங்க அடிகளார் (திருவருட் பிரகாச வள்ளலார்) அருளிய திருவருட்பா தொகுப்பிலிருந்து.



         திருப்பள்ளி எழுச்சி

1.

பொழுந்துவிடிந்த தென் உள்ளமென் கமலம்

பூத்தது பொன்ஒளி பொங்கிய தெங்கும்

தொழுதுநிற் கின்றனன் செய்பணி எல்லாம்

சொல்லுதல் வேண்டும்என் வல்லசற் குருவே

முழுதும் ஆனான் என ஆகம வேத

முறைகள்எ லாம்மொழி கின்றமுன் னவனே

எழுதுதல் அரியசீர் அருட்பெருஞ் ஜோதி

என்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.


 

2.

துற்குண மாயைபோய்த் தொலைந்தது ஞானம் 

தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான் 

சிற்குண வரைமிசை உதயஞ்செய் ததுமா 

சித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த 

நற்குணச் சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் 

நண்ணினர் தோத்திரம் பண்ணிநிற் கின்றார் 

எற்குண வளித்தஎன் அருட்பெருஞ் ஜோதி 

என்னம்மை யேபள்ளி எழுந்தருள் வாயே.


 

3.

நிலந்தெளிந் ததுகண மருங்கின சுவண 

நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற 

அலர்ந்தது தாமரை ஆணவ இருள்போய் 

அழிந்தது கழிந்தது மாயைமால் இரவு 

புலர்ந்தது தொண்டரோ டண்டரும் கூடிப் 

போற்றியோ சிவசிவ போற்றிஎன் கின்றார் 

இலங்குரு வளித்தஎன் அருட்பெருஞ் ஜோதி 

என்குரு வேபள்ளி எழுந்தரு ளாயே.


 

4.

கல்லாய மனங்களும் கரையப்பொன் ஒளிதான் 

கண்டது கங்குலும் விண்டது தொண்டர் 

பல்லாரும் எய்தினர் பாடிநின் றாடிப் 

பரவுகின் றார்அன்பு விரவுகின் றாராய் 

நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும் 

நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே 

எல்லாஞ்செய் வல்லஎன் அருட்பெருஞ் ஜோதி 

என்தெய்வ மேபள்ளி எழுந்தருள் வாயே.


 

5.

புன்மாலை இரவெலாம் புலர்ந்தது ஞானப் 

பொருப்பின் மேல்பொற்கதிர் பொலிந்தது புலவோர் 

சொன்மாலை கொடுத்தனர் துதித்துநிற் கின்றார் 

சுத்தசன் மார்க்கசங் கத்தவர் எல்லாம் 

மன்மாலை மாலையா வந்துசூழ் கின்றார் 

வானவர் நெருங்கினர் வாழிஎன் கின்றார் 

என்மாலை அணிந்தஎன் அருட்பெருஞ் ஜோதி 

என்பதி யேபள்ளி எழுந்தருள் வாயே.


 

6.

ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே 

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம் 

பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப் 

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் 

அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி 

அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே 

இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் ஜோதி 

என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.


 

7.

சினைப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தனர் அடியார் 

சிவசிவ போற்றிஎன் றுவகைகொள் கின்றார் 

நினைப்பள்ளி உண்ணத்தெள் ஆரமு தளிக்கும் 

நேரம்இந் நேரம்என் றாரியர் புகன்றார் 

முனைப்பள்ளி பயிற்றாதென் தனைக்கல்வி பயிற்றி 

முழுதுணர் வித்துடல் பழுதெலாம் தவிர்த்தே 

எனைப்பள்ளி எழுப்பிய அருட்பெருஞ் ஜோதி 

என்னப்ப னேபள்ளி எழுந்தருள் வாயே.


 

8.

மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு 

வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான் 

கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே 

கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார் 

பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே 

பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார் 

இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் ஜோதி 

என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.


 

9.

மருளொடு மாயைபோய்த் தொலைந்தது மதங்கள் 

வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம் 

அருள்ஒளி விளங்கிய தொருதிருச் சபையும் 

அலங்கரிக் கின்றனர் துலங்கிவீற் றிருக்கத் 

தெருளொடு பொருளும்மேன் மேல்எனக் களித்துச் 

சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே 

இருள்அறுத் தெனைஆண்ட அருட்பெருஞ்ஜோதி 

என்வள்ள லேபள்ளி எழுந்தருள் வாயே.


 

10.

அலங்கரிக் கின்றோம்ஓர் திருச்சபை அதிலே 

அமர்ந்தருட் சோதிகொண் டடிச்சிறி யோமை 

வலம்பெறும் இறவாத வாழ்வில்வைத் திடவே 

வாழ்த்துகின்றோம் முன்னர் வணங்கி நிற்கின்றோம் 

விலங்கிய திருள்எலாம் விடிந்தது பொழுது 

விரைந்தெமக் கருளுதல் வேண்டும்இத் தருணம் 

இலங்குநல் தருணம்எம் அருட்பெருஞ் ஜோதி 

எம்தந்தை யேபள்ளி எழுந்தருள் வாயே.

 

 

 

 

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி



Thursday, September 20, 2012

வசந்த கால கோலங்கள் / Vasantha kaala kolangal


வசந்த கால கோலங்கள் 

வானில் விழுந்த கோடுகள் 

கலைந்திடும் கனவுகள் 

கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

வசந்த கால கோலங்கள் 

வானில் விழுந்த கோடுகள் 

கலைந்திடும் கனவுகள் 

கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

வசந்த கால கோலங்கள் 

 
 

அலையில் ஆடும் காகிதம் 

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம் 

 
 

அலையில் ஆடும் காகிதம் 

அதிலும் என்ன காவியம் 

நிலையில்லாத மனிதர்கள் 

அவர்க்கும் என்ன உறவுகள் 

உள்ளம் என்றும் ஒன்று 

அதில் இரண்டும் உண்டல்லவோ 

கலைந்திடும் கனவுகள் 

கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

வசந்த கால கோலங்கள் 

வானில் விழுந்த கோடுகள் 

கலைந்திடும் கனவுகள் 

கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

 
 

தேரில் ஏறும் முன்னமே 

தேவன் உள்ளம் தெரிந்தது 

நல்ல வேளை  திருவுளம் 

நடக்கவில்லை திருமணம் 

நன்றி நன்றி தேவா 

உன்னை மறக்க முடியுமா 

கலைந்திடும் கனவுகள் 

கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

வசந்த கால கோலங்கள் 

வானில் விழுந்த கோடுகள் 

கலைந்திடும் கனவுகள் 

கண்ணீர் சிந்தும் நினைவுகள் 

வசந்த கால கோலங்கள்



 
 

படம் :- தியாகம் / 1978

இசை :- இளையராஜா 

பாடல் :- கண்ணதாசன் 

பாடியவர் :- எஸ். ஜானகி

 
 
 
 
Vasantha kaala kolangal song in English
 
 

Vasantha kaala kolangal

vaanil vizhundha kodugal

kalainthidum kanavugal

kanneer sinthum ninaivugal

vasantha kaala kolangal

vaanil vizhuntha kodugal

kalainthidum kanavugal

kanneer sinthum ninaivugal

vasantha kaala kolangal

 

 

 

alaiyilaadum kaagitham

mmm mmm hmmm mmmm mmmmmmm



alaiyilaadum kaagitham

athilum enna kaaviyam

nilaiyilladha manithargal

avarkkum enna uravugal

ullam endrum ondru

athil irundum undallavoo

kalainthidum kanavugal

kanneer sinthum ninaivugal

vasantha kaala kolangal

vaanil vizhuntha kodugal

kalainthidum kanavugal

kanneer sindhum ninaivugal

 

 

 

 

 

theril erum munnamey

dhevan ullam therindhadhu

nalla velai thiruvulam

nadakkavillai thirumanam

nandri nandri devaa

unnai marakka mudiyumaaa

kalainthidum kanavugal

kanneer sindhum ninaivugal

vasantha kaala kolangal

vaanil vizhundha kodugal

kalainthidum kanavugal

kanneer sindhum ninaivugal

vasantha kaala kolangal

 

 

 

Movie:- Thyagam / 1978

Music :- Ilaiyaraja

Lyrics :- Kannadasan

Singer:- S. Janaki

 
 

 
கண்ணீர்

ஆண்கள் அழ கூடாதாம் - யார் சொன்னது,
கல் நெஞ்சம் கொண்ட ஆண் மகனும்
கண்ணீர் வடிப்பான் காதலில் தோல்வி கண்டால்!!!




Wednesday, September 12, 2012

மனுமுறை கண்ட வாசகம் / Manu murai kanda vasagam


ராமலிங்க அடிகளார் (திருவருட் பிரகாச வள்ளலார்) அருளிய திருவருட்பா என்ற ஆன்மிக நூலிலிருந்து மனுமுறை கண்ட வாசகம் பாடல்.


மனுமுறை கண்ட வாசகம்


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ

நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ

வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ

வரவு போக்கொழிய வழி யடைத்தேனோ

தானம் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ

 

தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ

கலந்த சிநேகிதரைக் கலகஞ் செய்தேனோ

களவு செய்வோருக்கு உளவு சொன்னேனோ

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ

மண்ணோரம் பேசி வாழ் வழித்தேனோ

 

குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ

குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்த்தேனோ

ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ

இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்றேனோ

உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ

 

ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ

பொருளை இச்சித்துப் பொய் பல சொன்னேனோ

பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ

ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ

அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ

 

வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ

வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷத்தை யழித்தேனோ

பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ

பகைகொண்டு அயலோர் பயிரை அழித்தேனோ

கோள்பல சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ

 

கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ

கற்பிழிந்தவளைக் கலந்திருந்தேனோ

கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ

காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ

கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ

 

கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ

கன்றுக்குப் பாலுட்டாது கட்டி வைத்தேனோ

குருவை வணங்கக் கூசி நின்றேனோ

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ

 

பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ

கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ

சிவனடியாரைச் சீறி வைதேனோ

 

சுத்த ஞானிகளைத் தூக்ஷணம் செய்தேனோ

மாதா பிதாவை வைது நின்றேனோ

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ

தெய்வத்தை இகழ்ந்து செருக்கடைந்தேனோ

என்ன பாவம் செய்தேனோ ?

 
 
 
 
Manu murai kanda vasagam Song in English


Nallor manaththai nadungach seitheno
Nattatril kaiyai nazhuva vitteno
valiya vazhakittu maanang keduththeno
varavu pokkozhiya vazhi yadaiththeno
dhaanam kodupporai thaduththu ninreno
 
tharumam paaradhu thandam seitheno
kalantha sinegitharai kalakanj seitheno
kalavu seivorukku ulavu sonneno
manamoththa natpukku vanjagam seitheno
mannoram pesi vaazh vazhiththeno
 
Kudi vari uyarthi kollai kondeno
kudikkindra nirulla kulaththai thurtheno
ezhaigal vayiru eriyach seitheno
irapporku pitchai illai endreno
uyir kolai seivorku upagaram seitheno
 
uun suvai undu udal valarththeno
porulai itchiththup poi pala sonneno
pothu mandapaththai poyidiththeno
aasai kaati mosanj seitheno
anbudaiyavarkuth thunpanj seitheno
 
Velai ittu kuli kuraiththeno
veiyilukkodhunkum virukshaththai yazhiththeno
pasiththor mugaththai paarathiruntheno
pagai kondu ayalor payirai azhiththeno
kol pala solli kudumpang kalaiththeno
 
kalangi olinthorai kaatik koduththeno
karpizhinthavalai kalanthiruntheno
kanavan vazhi nirporai karpazhiththeno
kaaval kondiruntha kanniyai azhiththeno
karuppa mazhiththu kaliththiruntheno
 
katravar thammai kadukaduththeno
kandrukkup paaluttathu katti vaiththeno
guruvai vananga kusi ninreno
guruvin kaanikkai kodukka marantheno
patchiyai kundil pathaikka adaitheno
 
periyor paatil pizhai sonneno
kallum nellum kalanthu vittreno
thavanj seivorai thaazhvu sonneno
aalayak kadhavai adaithu vaiththeno
sivanadiyaarau siiri vaitheno
 
suthu gnanikalai thukshanam seitheno
maatha pithaavai vaidhu ninreno
thanthai thaai mozhiyai thalli nadantheno
theivaththai egazhnthu serukkadaintheno
enna paavam seitheno ?
 
enna paavam seitheno ?
enna paavam seitheno ? ...

 
 
 

 

Saturday, September 1, 2012

ஜோதி பாடல் / Jothi Padal

 

திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா விலிருந்து  ஜோதி பாடல். மனம் உருகும் பாடல் , மழையூர் சதாசிவம் அய்யா அவர்களின் குரலில் நாம் நம்மை மறந்து கேட்கும் ஒரு அற்புத பாடல்.

 

 


அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி

தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

 

ஜோதி பாடல்

 

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ்

ஜோதி ஜோதி ஜோதி பரம்

ஜோதி ஜோதி ஜோதி யருள்

ஜோதி ஜோதி ஜோதி சிவம்

 

வாமஜோதி சோமஜோதி வானஜோதி ஞானஜோதி

மாகஜோதி யோகஜோதி வாதஜோதி நாதஜோதி

ஏமஜோதி வியோமஜோதி யேறுஜோதி வீறுஜோதி

ஏகஜோதி யேகஜோதி யேகஜோதி யேகஜோதி

 

ஆதிநீதி வேதனே ஆடல்நீடு பாதனே

வாதிஞான போதனே வாழ்க வாழ்க நாதனே 

 
 

 

 

Thiruvarut piragasa vallalar aruliya Thiruvarutpa vilirundhu jothi padal. mind blowing song singing by mazhiyur sathasivam ayya. such a devotional voice.

 

 

Arutperungjothi Arutperungjothi

Thanipperungkarunai Arutperungjothi

 

 

Jothi Padal

 

Jothi jothi jothi suyanj

jothi jothi jothi param

jothi jothi jothi yarul

jothi jothi jothi sivam

 

vaamajothi somajothi vaanajothi gnanajothi

maagajothi yogajothi vaathajothi naathajothi

emajothi viyomajothi yerujothi virujothi

egajothi yegajothi yegajothi yegajothi 

 

aathinithi vedhane aadalneedu paadhane

vaathignana podhane vazhga vazhga naadhane

vazhga vazhga naadhane...

 
 

Thursday, August 9, 2012

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே / Ovvoru pookkalume solgirathey


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே  

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே 

 

 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே  

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே 

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே 

இரவானால் பகல் ஒன்று  வந்திடுமே 

நம்பிக்கை என்பது வேண்டும் 

நம் வாழ்வில் 

லட்சியம் நிச்சயம் வெல்லும் 

ஒரு நாளில் 

மனமே ஓ மனமே 

நீ மாறிவிடு 

மழையோ அது பனியோ

நீ மோதிவிடு 

 

 

 

 

 

 

உள்ளம் என்றும் எப்போதும் 

உடைந்து போகக் கூடாது 

என்ன இந்த வாழ்க்கை என்ற 

எண்ணம் தோன்றக் கூடாது 

எந்த மனிதன் நெஞ்சுக்குள் 

காயம் இல்லை சொல்லுங்கள் 

காலப்போக்கில் காய மெல்லாம் 

மறைந்து போகும் மாயங்கள் 

உளி தாங்கும் கற்கள் தானே 

மண்மீது சிலையாகும் 

வலி தாங்கும் உள்ளம் தானே 

நிலையான சுகம் காணும் 

யாருக்கு இல்லை போராட்டம் 

கண்ணில் என்ன நீரோட்டம் 

ஒரு கனவு கண்டால் 

அதை தினம் முயன்றால் 

ஒரு நாளில் நிஜமாகும் 

மனமே ஓ மனமே 

நீ மாறி விடு 

மழையோ அது பனியோ 

நீ மோதி விடு 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே 

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே 

 

 

 

 


வாழ்க்கை கவிதை வாசிப்போம் 

வானம் அளவு யோசிப்போம் 

முயற்சி என்ற ஒன்றை மட்டும் 

மூச்சு போல சுவாசிப்போம் 

லட்சம் கனவு கண்ணோடு 

லட்சியங்கள் நெஞ்சோடு 

உன்னை வெல்ல யாரும் இல்லை 

உறுதியோடு போராடு 

மனிதா உன் மனதை கீரி 

விதை போடு மரமாகும் 

அவமானம் படுதோல்வி 

எல்லாமே உரமாகும் 

தோல்வியினறி வரலாறா  

துக்கமென்ன என் தோழா 

ஒரு முடிவிருந்தால் 

அதில் தெளிவிருந்தால் 

அந்த வானம் வசமாகும் 

மனமே ஓ மனமே 

நீ மாறி விடு 

மழையோ அது பனியோ

நீ மோதி விடு 

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே  

வாழ்வென்றால் போராடும் போர்க்களமே 

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே 

இரவானால் பகல் ஒன்று  வந்திடுமே 

நம்பிக்கை என்பது வேண்டும் 

நம் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும் 

ஒரு நாளில் 

மனமே ஓ மனமே 

நீ மாறி விடு 

மழையோ அது பனியோ

நீ மோதி விடு





படம் :- ஆட்டோகிராப் / 2004

இசை :- பரத்வாஜ்

பாடல் :- பா.விஜய் 

பாடியவர்கள் :- சித்ரா,பரத்வாஜ் 

 

 

 

Ovvoru pookkalume solgirathey song in English

 

Ovvoru pookkalume solgirathey

vaazhvendral poraadum porkkalame

 

 

ovvoru pookkalume solgirathey

vaazhvendral poraadum porkkalame

ovvoru vidiyalume solgirathey

iravaanal pagalondru vandhidume

nambikkai enbadhu vendum

nam vaazhvil

latchiyam nichchayam vellum

oru naalil

maname o maname

nee maarividu

mazhaiyo adhu paniyoo

nee moothividu

 

 

 

ullam endrum eppoodhum

udaindhu poga kudaadhu

enna indha vaazhkkai endra

ennam thondra kudaadhu

endha manithan nenchukkul

kaayam illai sollungal

kaalappokkil kaa yamellam

marainthu pogum maayangal

ouli thangum karkkal thaane

manmeethu silai yaagum

vali thaangum ullam thaane

nilaiyaana sugam kaanum

yaaruk killai poraattam

kannil enna neerottam

oru kanavu kandaal

athai thinam muyandraal

oru naalil nijamaagum

maname o maname

nee maarividu

mazhaiyo athu paniyo

nee mothividu

ovvoru pookkalume solgirathey

vaazhvendraal poraadum porkkalame




vaazhkkai kavithai vaasippom

vaanam alavu yosippom

muyarchi endra ondrai mattum

muchchu pola suvasippom

latcham kanavu kannodu

latchchiyangal nenjodu

unnai vella yaarum illai

uruthiyoodu poraadu

manithaa un manathai kiri

vidhai podu maramaagum

avamaanam padu tholvi

ellaame uramaagum

tholvi yindri varalaaraa

thukkamenna en thozhaa

oru mudivirundhaal 

athil thelivirundhaal

antha vaanam vasamaagum

maname o maname

nee maarividu

mazhaiyoo adhu paniyoo

nee mothividu

ovvoru pookkalume solgirathey 

vaazhvendraal poraadum porkkalame

ovvoru vidiyalume solgirathey

iravaanaal pagalondru vanthidume

nambikkai enbadhu vendum

nam vaazhvil

latchiyam nichchayam vellam

oru naalil 

maname o maname

nee maarividu

mazhaiyoo adhu paniyoo

nee modhividu



Movie:- Autograph / 2004

Music:- Bharadwaj

Lyrics:- Pa. Vijay

Singer;- Chitra, Bharadwaj







முயன்றால் முடியாதது எதுவும் இல்லை
 
முயன்றால் முடியாதது எதுவும் இல்லை உலகில்,    

யார் சொன்னது?!!!!!

முயன்றும் முடியவில்லை அவளை (காதலை) மறப்பதற்கு.

(காதலின் வலியில்)



Saturday, July 21, 2012

திருமணத் தடை நீங்க பரிகாரம் / Remedies for obstacles of marriage


திருமண தடை நீங்க பனைமலைக் கோயில் / Remedies for obstacles of marriage



திருமண தடை நீக்கும் ஓர் அற்புத ஸ்தலம். அது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனந்தபுரம் அடுத்த பனைமலை பேட்டை  என்ற ஊரில் உள்ளது.

 

செஞ்சியிலிருந்து அனந்தபுரம் வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் பனை மலை கோயில் உள்ளது. அனந்தபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 10 நிமிடத்தில் கோயிலுக்கு நடந்து சென்று விடலாம்.


மிகப் பழமையான கோயிலுக்கு வந்துள்ளோம் என்ற உணர்வை தாண்டி ஏதோ சுற்றுலா தளத்திற்கு வந்து விட்டோமோ என்ற எண்ணம் தோன்றுவதில் வியப்பில்லை. காரணம் மலையை சுற்றியுள்ள இயற்கை அப்படி நம்மை நினைக்க வைக்கிறது. 

 

 

இங்கு மலைமீது அருள்மிகு அஸ்ததாளாம்பிகை உடனுறையும் தாளகிரிஸ்வரர் அருள்பாலிக்கிறார். திருமணம் ஆகாதவர்கள் பிரதோஷ காலத்தில் அம்மன் காலடியில் தங்கள் பிறந்த ஜாதகத்தை வைத்து மனமுருகி வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடப்பதாக ஐதிகம். 


ஞாயிறு தோறும் மாலை 4.30 – 6.00 அளவில் ராகு காலத்தில்  துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. திருமணமாகாத ஆண்களும் பெண்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.


இங்கு ஆண்டுதோறும் சித்திரை முதல்  நாள், படி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

 

சுனை


லிங்கங்கள் அனைத்தும் கரிய நிறக்கல்லில் பளபளப்பாகவும் திரட்சியோடும் அமைந்து கண்ணை கவர்கிறது.


உலகம் புகழும் அஜந்தா, எல்லோராவிலுள்ள குகை ஓவியங்களைப் போன்றது, பனைமலை கோயிலில் உள்ள பார்வதியின் எழிலோவியம் என்கின்றனர்.

 

கோயிலின் சிறப்பு என்னவென்றால் (1300 ஆண்டுகளுக்கு முன்னர்) கிபி 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களில் கலைக்கடல் என்று பெயர் பெற்ற இரண்டாம் நரசிம்மன் எனும் ராஜசிம்மனால் கட்டப் பெற்றது, இந்த பனைமலைக் கோயில்.இம்மன்னன் தான் காஞ்சியில் கைலாய நாதராலயத்தையும், மாமல்லபுரத்து கலைச் செல்வங்களையும் தோற்றுவித்தவன் என்கிறது வரலாறு.



பனைமலை மலைக் கோயிலும் பரந்து கிடக்கும் ஏரியும் பார்க்க கண் கொள்ளாக்காட்சி. வடக்கே செஞ்சி, தெற்கே விழுப்புரம், தென் மேற்கே திருக்கோவிலூர் வரையுள்ள இடைப்பட்ட பகுதியில் பெரிய ஏரி என்றால் அது பனை மலை ஏரி தானாம்.


பனைமலை ஏரி


இந்திய தொல் பொருள் துறையின் பாதுகாப்பில் உள்ள பனைமலை மலைக் கோயிலில் போதிய மின் விளக்குகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.








Sunday, June 3, 2012

இது ஒரு பொன் மாலை பொழுது / Ithu oru pon malai pozhudhu

 

 எஸ்.பி.பி :-

 

ஹே ஓ ம்ம்ம் லல ல

 

பொன் மாலை பொழுது 

இது ஒரு பொன் மாலை பொழுது 

வானமகள் நாணுகிறாள் 

வேறு உடை பூணுகிறாள் 

 

 இது ஒரு பொன்மாலை பொழுது 

ஹ்ம்ம் ஹே ஹா ஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம் 

 

 

 

 

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் 

ராத்திரி வாசலில் கோலமிடும் 

 

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் 

ராத்திரி வாசலில் கோலமிடும் 

வானம் இரவுக்கு பாலமிடும் 

பாடும் பறவைகள் தாளமிடும் 

பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ 


இது ஒரு பொன்மாலை பொழுது

 

 



வானம் எனக்கொரு போதி மரம் 

நாளும்  எனக்கது சேதி தரும் 


வானம் எனக்கொரு போதி மரம் 

நாளும் எனக்கது சேதி தரும் 

ஒரு நாள் உலகம் நீதி பெரும் 

திருநாள் நிகழும் தேதி வரும் 

கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன் 

 

 இது ஒரு பொன்மாலை பொழுது 

ஆஅ...ஹே ஓ ஹ்ம்ம் லலலா 

ஹ்ம்ம் ஹே ஹா ஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம்

 
 
 
 
 

படம் :- நிழல்கள் / 1980

இசை :- இளையராஜா 

பாடல் :- வைரமுத்து 

பாடியவர் :- எஸ்.பி.பாலசுப்ரமணியம் 

 
 
 
 
  
 
Ithu oru pon malai pozhudhu song in English
 
 
S.P.B:-
 
hey oh hmm lala la
 

pon maalai pozhudhu

ithu oru pon maalai pozhudhu

vaanamagal naanugiraal

veru udai punugiraal

 

idhu oru pon maalai pozhudhu

hmm hey ha oh hmm mm mm

 
 

aayiram nirangal jaalamidum

raathiri vaasalil koolamidum


aayiram nirangal jaalamidum

raathiri vaasalil koolamidum

vaanam iruvukku paalamidum

paadum paravaigal thaalamidum

poo marangal saamarangal veesaadho


idhu oru pon maalai pozhudhu



vaanam enakkoru bhodhi maram

naalum enakkadhu sedhi tharum


vaanam enakkoru bhodhi maram

naalum enakkadhu sedhi tharum

oru naal ulagam needhi perum

thirunaal nigazhum thedhi varum

kelvigalaal velvigalai naan seiven

 
 

idhu oru pon maalai pozhudhu

ah ah hey oh hmm lalalaa

hmm hey haa ho hmm mm mm

 
 
 

Cinema:- Nizhalgal / 1980

Music:- Ilaiyaraja

Lyrics:- Vairamuthu

Singer:- S.P.Balasubramaniam

 
 
 
 
 
 
 
உணர்வுகள்

யார் ஒருத்தர் அடுத்தவங்களோட  உணர்ச்சிகளுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கறாங்களோ, அவங்களோட உணர்வுகளை கடவுள் மதிக்கிறார்.
 
 

Featured Post

எந்தன் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல / Enthan vaazhkaiyin artham solla

  எந்தன் வாழ்க்கையின்  அர்த்தம் சொல்ல பூக்களின் வண்ணம் கொண்டு  பிறந்த மகளே என் மகளே        நான் வாழ்ந்தது கொஞ்சம்  அந்த வாசத்தில் வந்துதித்த...